பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மகாத்மா காந்தி முதல் \க்கு இழைக்கப்படும் அநீதிக்கும், கொடுமை தொடர்ந்து வாதாடினார். குள்ள இந்தியர்கள் காந்திஜியைத் தங்கள் %ல்வராகக் கருதி மதித்தனர். அவரிடம் அள ற்ற அன்பும், முழுநம்பிக்கையும் கொண்டனர். 1906-ல் தென்னப்பிரிக்கா இந்தியருக்கும் அரசாங்கத்திற்கும் அடிக்கடி பூசல் உண்டாயிற்று. அதில் தாமே தலைமை ஏற்றுப் போராடி சிறைப் பட்டுப் பல துன்பங்களை அனுபவித்தார். பின்னர் அரசாங்கத்தார் இணங்கி வரவே விடுதலை யானார். 1914-ல் காந்திஜி தாயகம் திரும்பினார். இந்தி யாவில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டி ருந்தது. s கோபால கிருஷ்ணகோகலேவை காந்திஜி அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். அவரோடு இணைந்து இந்திய விடுதலைக்கான வழிகளை ஆராய்ந்தார். அடுத்த ஆண்டு ஆமதாபாதில் ஆசிரம் ஒன்றை ஆரம்பித்தார். அதில். உண்மை, தன்னல மற்ற தன்மை, நாட்டுக்கு உழைத்தல், பிறருக்கு கேடு செய்யாமை, முதலிய நற்பண்புகள் உடையவர்களே சேரத் தக்கவர் என்று அறிவித்து; அவ்விதமே நிகழச் செய்து, தன்னல மற்ற சேவை செய்து வந்தார்.