பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை இந்த சமயத்தில் ஐரோப்பாவில் h ஆரம்பமானது. அந்தப் போருக்கு ஆள் : இ : பொருள் உதவியும் செய்ய இந்திய அரசு பு: யது. அது பற்றி யோசிக்க டெல்லியில் வை § தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட காந்திஜி, "நாங்கள் போரில் உங்களுக்கு உதவத் தயார்; ஆனால் வெற்றி பெற்ற பின்னால் எங்களுக்கு ஆட்சி யுரிமை அளிக்க வேண்டும்” என்ற நிபந்தனையை விதித்தார். அரசாங்கத்தார் அதற்கு இசைந்த உடனே இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டு. ஆயிரக் கணக்கான இந்திய வீரர்களைப் போரில் கலந்து கொள்ளச் செய்தார். போர் முடிந்தது. ஆனால், சொன்னபடி முழு சுயாட்சி அளிக்காமல்; அரசாங்க அலுவல்களில் இந்தியர் சிலரை நியமித்ததோடு இருந்து விட்ட னர், இது காந்திஜியின் மனதிற்கு மிகுந்த வேத னையையளித்தது. மன அமைதி கொள்ளாத காந்திஜி இனி அரசோடு ஒத்துழைப்பதில்லை என்று ஒத்துழிை யாமை இயக்கத்தை நடத்தினார். அப்போராட்டம் காரணமாக பலமுறை சிறை சென்றார். பல துன்பங்களை அனுபவித் தார்.