பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை ..o.o. "இந்தியாவை விடுதலை செய்" என்று பிரித் னுக்கு தாம் விடுத்த வேண்டுகோளின் பொருன்iர்: உலகத் தலைவர்களும் புரிந்துகொள்ளும்பு; விளக்கி எழுதினார். o, "எல்லா ஆசிய நாடுகளின் விடுதலைக்கும் இந்தியாவின் சுதந்திரம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அற்புத எழுத்தாளராக காந்திஜி சிறந்த வழிகாட்டியாகவும், பெரிய அரசியல் வாதியாகவும் திகழ்ந்த காந்திஜி மிகச் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ரத்தினச் சுருக்க மாகவும்; பொருள் பொதிந்த கடிதங்கள் எழுது வதிலும் அவர் பேர் பெற்றவர். ஒரு சில வார்த்ைைகளிலேயே, பெரிய உ ண் ைம க ைள விளக்கிச் சொல்லும் தனித்தொரு ஆற்றல் பெற் றிருந்தார். பிழையின்றியும், அடித்தல் திருத்தல் இல்லா மலும், துரிதமாகவும் எழுதுவதில் காந்திஜி வல்லவர். அவர் தமது வலக்கையைப் போலவே இடது கையாலும் எழுதும் ஆற்றல் பெற்றவர். 1909-ல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பலில் பயணம் செய்தபோது, ஹிந்த் ஸ்வராஜ்யா என்னும் நூலை எழுதி முடித்தார். மகா-2