பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை கொண்ட நவகாளி யாத்திரை' உப்புச் சத்திய் கிரகத்தைப் போலவே சரித்திரப் புகழ் பெற்றது: தான் ஒரு ஹிந்துவாக இருந்தும் எம்மதமும சம்மதம் என்கிற கொள்கை உடையவர். கீதையில் தமக்குள்ள ஈடுபாட்டுடனேயே குரானையும், பைபிளையும், கற்றுணர்ந்தவர். காந்திஜி 'மகாத்மா” ஆனார்! 1915-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி, கோண்டல் என்ற சுதேச சமஸ்தானத்துக்குக் காந்திஜி சென்றிருந்தார். தென்னாப்பிரிக்காவில் இன வேற்றுமையை எதிர்த்து, காந்திஜி நடத்திய போராட்டத்துக்குக் கோண்டல் மகாராஜா பெரும் ஆதரவு அளித்ததால் நன்றி தெரிவிக்கக் காந்திஜி அங்கே சென்றார். கோண்டல் சமஸ்தான திவான் ஆர்.வி. பட்டாரி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற் பின் போது, வைத்யராஜ ஜீவராம் காளிதாஸ் சாஸ்திரி, காந்திஜிக்கு "மகாத்மா” என்ற பட்டத் தைச் சூட்டினார். இந்த விவரத்தை பம்பாய் தொழிலதிபர் திரு. மனுபாய் பிமானி தெரிவித்தார். வரவேற்பின் போது சமஸ்கிருத வித்வானான ஜீவராம் காளிதாஸ் சாஸ்திரி காந்திஜியைப் புகழ்ந்து பல பாடல்களைப் பாடினார். ஒரு