பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் பாடலில் காந்திஜியை மகாத்மா காந்தி" என்றே. அவர் போற்றிப் பாடினார். அந்தப் பட்டமே காந்திஜிக்கு நிலைத்து நின்று பெரும் புகழ் ஈட்டித் தந்தது. . காந்திஜியும் உண்ணாவிரதமும் காந்திஜி நாட்டுக்காக உபவாசம் இருந்த நாட்களையும், அவர் உணவு அருந்திய நாட்களை யும் எண்ணிப் பார்த்தால் கண்களில் நீர் கசியும், அஹிம்சையும், உண்ணாவிரதமும், காந்திஜியின் ஒப்பற்ற ஆயுதங்களாகத் திகழ்ந்தன. பிறரிடம், எதிர்பார்க்கும் மாற்றத்தைப் பெற வும்; சில சமயம் பிறருக்காக தன்னையே தண்டித் துக் கொள்ளவும், சில சமயம் தனக்கு வேண்டிய மனோவலிமைக்காகவும் அவர் உபவாசத்தையே பெரிதும் நம்பினார். 'தங்கத்தை தீயிலிட்டு, புடம் போடுவது போல், உண்ணாவிரதத்தினால் அவர் தமது ஆத்மாவிற்கு மேலும் மேலும் மெரு கூட்டினார். உபவாசத்தின் மூலம் உள்ளத்திற்கு புதிய பலம் ஏற்படும் என்று நம்பினார். பிறருக்கும் அவர் அதையே போதித் தார். -- இந்தியாவின் ஈடு இணையற்ற முதல் சுதந்திர தினம்; 1947-ஆகஸ்ட் 15-ம் தேதி. நாடெங்கும் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடி மகிழ்ச்சியில்