பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முல்த அப்பொழுது காந்தியிடம் ஆசி பெறவந்த வங்காள மந்திரிகளை நோக்கி-நீங்கள் இன்று முதல் மகுடத்தை அணியப் போகிறீர்கள். இன்று வரை எப்படி எளிய வாழ்க்கை நடத்தி வந்திர் களோ அப்படியே இனியும் நடத்தி வாருங்கள். அதிகாரமும் பதவியும் உங்களை ஏமாற்றிவிடக் கூடாது. மக்களின் முன் பணிவு, எளிமை, அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நல்ல பண்பு களுக்கு மேற்கோளாக நீங்கள் வாழ வேண்டும். கிராமங்களையும், ஏழை எளியோரையும் நீங்கள் கைதுக்கி விடவேண்டும்; ஆங்கிலேயரின் ஆட்சியில் பரிட்சை எதற்குமே இடமில்லை. ஆனால், இன்று முதலோ நமக்கு எல்லாத் துறை களிலும் பரீட்சைகள் தாம். அவற்றில் தேற கடவுள் உங்களுக்கு சக்தியைக் கொடுக்கட்டும்' என்று கூறி ஆசி வழங்கினார். பிறகு அனைவரும் அந்த சுதந்திர நாளில் காந்தியுடன் உபவாசம் இருந்து நூல் நூற்றனர். காந்திஜியைக் கவர்ந்தவர்கள் உலகம் முழுவதும் இணையற்ற நாவலாசிரிய ராக அறியப்பட்ட ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாயை மகாத்மாகாந்தி குருவாக உவந்து ஏற்றுக் கொண் டார். s 1-ால்ஸ்டாயை-ஒர் ஆன்மிகச் செல்வராக; நன்னெறி வாழ்க்கையை கடைபிடிக்கவும், சகல துன்பங்களையும் துாசிபோல உதறித் தள்ளவும்