பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை வேண்டுமென்று முழு மூச்சாகப் பாடுபட்டால் 'இந்தியா என்பது நமது வீடு-அதில் வாழும் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த் இந்தியர்” என்பதை மக்களுக்கு இடைவிடாமல் போதித்த உத்தமர். காந்திஜியின் நேரான அணுகலும், ஒளிவு மறைவற்ற பேச்சும் அரசியல் ரீதியில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தின. இது அரசியல் விவகாரங்களில் மிகவும் தேர்ந்தவர் களை எல்லாம் கூடச் செயலற்றுப் போகும்படிச் செய்தன. மனித குலத்தின் மகிழ்ச்சிக்காகத் தன்னை முற்றும் அர்ப்பணித்துக் கொண்ட காந்தியைக் கண்டுகொண்டவர்களில் பாரதியாரும் ஒருவர். அரசியல் நடவடிக்கைகளில் திலகரின் வழி யைச் சரியென எண்ணிச் செயல்பட்டு கொண்டு வந்த பாரதியார் அகவுணர்வால் காந்திஜியின் மகத்துவத்தைக் கண்டுகொண்ட மாத்திரத்திலேயே பாரதியார் உணர்ச்சிவயப்பட்டு "வாழ்கநீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்