பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை காந்திஜி தம் வாழ்நாளில் ஒரு நாள் கூட ஒரு நிமிஷங்கூட வீணாகச் செலவழித்ததில்லை. நாம் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் பயன்படுத்து கிறோம்; எத்தனை மணி நேரத்தை வீணடிக் கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது அல்லவா? போர் பந்தர் முதல் ராஜ்காட் வரை (காந்திஜி ஓர் கண்ணோட்டம்) (1869–1948) 1869 அக்டோபர் -2-ம் தேதி மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி பிறந்தார். 1883 கஸ்தூரிபாயை மணந்து கொண்டார். 1884 அண்ணலின் தந்தை கரம்சந்த் காந்தி காலமானார். 1888 செப்டம்பர் 4ம் தேதி மேற்படிப்புக்காக லண்டனுக்குப் புறப்பட்டார். 1891 ஜூன் 10ம் தேதி பாரிஸ்டர் பட்டம் பெற் றார். ஜூலை 7-ம் தேதி பம்பாய் திரும்பி னார். தாயாரின் மரணச் செய்தி கேட்டுத் துடித்தார். 1892 ராஜ்கோட், பம்பாய் ஆகிய நகரங்களில * - தமது வக்கீல் தொழிலைத் துவக்கினார்.