பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா காந்தி முதல் 缅 றார். அங்கு பல்வேறு தொழில் செய்தார். எங்கும் எதிலும் மனம் நிலைத்து நிற்கவில்லை. செய்வதறி யாது திகைத்தார். இந்த நிலையில் ஒரு வழக்கறிஞரிடம் அவர் வேலைக்குச் சேர்ந்தார். - = - இந்த வாய்ப்பை லிங்கன் தனது மாபெரும் அதிர்ஷ்டமாக நம்பினார். வக்கீல் தொழில் லிங்க லுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த வழக்கறிஞர் மிக்க நல்லவராக இருந்தார். லிங்கனை தனது ஜீனியர்களில் ஒருவராக நினைத்து, மதித்து அன்பு செலுத்தினார். | இந்த இடைக் காலத்தில் லிங்கனே தனது ஊதியத்தில் நிறையச் சட்ட புத்தகங்கள் வாங்கிம் படித்து தம் அறிவை விருத்தி செய்து கொண்டு சட்டக் கல்வியில் தேறினார். ஸ்பிரிஸ் பீல்டு என்னும் இடத்தில் தாம் ஒரு வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். இங்கு அவ ருக்கு ஜான்ஸ் ருவர்ட் என்னும் வழக்கறிஞர் ஒருவர் நண்பரானார். வேறு சிலரும் நண்பர் களாயினர். நண்பர்களின் உதவியால் லிங்கனுக்கு வசதி யான உணவு, உடை, உறைவிடம் எல்லாம் அமைந்தன. - ஆப்ரகாம் லிங்கன் சிறந்த முறையில் வக்கீல் தொழிலை நடத்தி வந்தார். பணம் அவருக்கு ஒரு