பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மகாத்மா காந்தி முதல் இதனால் இல்லினாய்ஸ் நகரம் முழுவதும் வழக்கறிஞர் லிங்கனைப் பற்றிப் பெருமையாகப் பேசப்பட்டது. பேரும் புகழும் லிங்கனைத் தேடி வந்த துவக்கி யதால், நீதிபதி பதவி அவரை நாடி வந்தது. நீதிக்கும், நேர்மைக்கும், அன்பிற்கும், இரக்கத் திற்கும் கடின உழைப்பிற்கும் பெயர் போன் ஆப்ரகாம்லிங்கனைப் பற்றி இல்லினாய்ஸ் நாட்டு மக்கள் நன்கு அறிந்து கொண்டிருந்தனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் பொது மன்றமாகிய காங்கிரஸ் மகாசபையில் அங்கம் வகித்த ஆப்ரகாம்லிங்கன் மிகுந்த தகுதி வாய்ந்தவர் என்று மக்கள் எண்ணினர். அதன்படி 1816-ம் ஆண்டில் காங்கிரஸ் மகா சபைக்கு பிரதிநிதியாக லிங்கனைத் தேர்ந்தெடுத்து. அனுப்பி வைத்தனர். அந்த காங்கிரஸ், மகாசபையில் ஒருவருக் கொருவர் கருத்து வேற்றுமைகள் கொள்ளத் துவங் கினர். இதன் விளைவாக ஒன்றாயிருந்த காங்கிரஸ் கட்சி வடநாட்டு கட்சி என்றும்; தென்னாட்டு கட்சி என்றும் இரு பிரிவுகளாகப் பிளவுபட்டன. ஆனால்பின்னாளில் இந்த வடக்கு, தெற்கு ஆகிய இரு கட்சிகளையும், இரு நாட்டையும் ஒன்றாக இணைத்து, ஒரே ஐக்கிய அமெரிக்காவாக உரு