பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை -- 53. அழுவதற்கு குழிவிழுந்த கண்களில் - - நீர் இல்லை --- to அரசியல்வாதியாக மாறினாலும் ஏழை எளிய மக்களின் உற்ற தோழராகவும்; கருணை உள்ளம் படைத்தவராகவும், லிங்கன் என்றுமே மாறாமல் இருந்தார். ஒருமுறை தென்பகுதிப் பண்ணைகளைப் பார்வையிடச் சென்ற லிங்கன், சிலைபோல் நின்று: விட்டார். ஒரு பண்ணை முதலாளி, வரிசையாக மரத்தில் கட்டி வைத்திருந்த தனது அடிமை நீக்ரோக்களை மாறிமாறிச் சவுக்கால் அடித்துக்கொண்டிருந்தார். அவர்களது தலை துவண்டு தொங்கியது. கரிய நிற உடம்பெல்லாம் செக்கச் செவேலென்று ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. உடலில் சவுக்கின் தழும்பு படாத இடம் இதயம் ஒன்று தான். -- லிங்கன் இதற்கான காரணத்தை விசாரித் தார். அவர்கள் இரவில் வேலை செய்ய மறுப்ப தாக பண்ணை முதலாளி பதிலளித்தார். "பகலில் இவர்கள் வேலை செய்யவில்லையா?” என லிங்கன் கேட்டார். 'பகல், இரவு இருவேளை வேலைக்கும் சேர்த்துத்தான், நான் இவர்களை அதிக விலைக்கு வாங்கி இருக்கிறேன்” எனப் பண்ணை முதலாளி கூறி முடிப்பதற்குள் லிங்கன் அங்கிருந்து புறப் பட்டு விட்டார்.