பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 55 அடிமை வியாபாரம் தவறில்லை என்றால்; உலகில் செய்யப் படும் எந்தக் கொடிய க்ெயலும் தவறில்லையாகும்” என்று அழுத்தமாக வற்புறுத் திப் பேசினார். லிங்கன் கொண்டுவந்த தீர்மானம் அனை வரையும் சிந்திக்க வைத்தது, அதன் விளைவாக அப்போது அரசியல் மன்றத்தில் "கடவுள் முன்னி லையில் நாம் அனைவரும் சமமானவர்களே. ஒவ்வொருவருக்கும் பிறப்பு என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மறுக்க முடியாத சில உரிமைகள் உண்டு. வாழ்க்கை; விடுதலை யுணர்வு, இன்பம் நாடுதல், ஆகியவை அவ்வுரிமை களில் அடங்கும்”-என்று சுதந்திர அறிக்கை படிக்கப்பட்டது. சுதந்திர அறிக்கை படிக்கப்பட்ட பிறகும் தென் பகுதியில் அடிமை முறை நீக்கப்படாமல் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது. இது பற்றி சர்ச்சைகளும், குழப்பங்களும் தலை தூக்கியபோது, 'அடிமை முறை பற்றி தாங்களே ஒரு முடிவுக்கு வர, கான்சாஸ் நாட்டு மக்களின் விருப்பத்திற்கே விடுவது என்று 1854இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதனால் அமெரிக்க வட நாட்டவரும்; தென் னாட்டவரும் குடியேறிய கான்சாஸ் நாட்டு மக்களுக்குள் சண்டை ஏற்பட்டது.