பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மகாத்மா காந்தி முதல் இந்தச் சண்டையினால் 'குடியரசுக் கட்சி' என்று ஒரு புதிய கட்சி தோன்றியது. - - அந்தக் குடியரசுக் கட்சியை நாட்டு நலனைக் கருதி உருவாக்கியவரே ஆப்ரகாம்லிங்கன் தான். -- குடியரசுக் கட்சியை உருவாக்கிய லிங்கன், ஐக்கிய நாடுகளில் அடிமை முறை மேலும் நீடிக்கக் கூடாது என்று கூறினார். * - லிங்கனின் ஆதரவாளர்கள், இனியும் பொறுத் திருக்கத் தேவை இல்லை; அடிமை முறையை அறவே அகற்ற உடனே அறிக்கை விடுமாறு கூறினார். ஆனால் லிங்கன் தீவிரமாகச் சிந்தித்து செயல் பட்டார். இந்த சமயத்தில் அமெரிக்கக் குடியாட்சித் தேர்தல் வந்தது. நாட்டு மக்களின் பெரும் மதிப் பிற்குரியவராக விளங்கும் லிங்கனே மக்கள் தலைவராக வரவேண்டும் என அனைவரும் விரும் பினார்கள். ". 1860-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடியரசின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் நான்கு ஆண்டுகளுக்கு அவரது தாய் நாட்டின் வாழ்வு, தாழ்வுகள் எல்லாம் அவர் கையில் ஒப்படைக்கப்பட்டன. = i =