பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 57 இந்த சமயத்தில் மனம் மாறியிருந்த தென் னாட்டவரும்; ஆபிரகாமுக்கு ஆதரவு தந்தனர். இது ஒரு நல்ல வாய்ப்பு-இதன் மூலம் அடிமை முறையை அகற்றிவிடலாம் என்று கருதிய லிங்கன் குடியரசுப் பதவியை ஏற்றார். ஒரு மனிதன திண்ணியனாக இருந்தால் மட்டும்போதும்; அவன் எண்ணியபடி ஆகமுடியும்' என்பதற்கு லிங்கன் ஒரு பசுமையான சான்றாக, விளங்குகிறார். பதவியும் பொறுப்புணர்வும் குடியரசுத் தலைமைப் பொறுப்பேற்ற லிங்கன் தமது பணிகளைச் செம்மையாகவும்; பதவி வகித்த சில மாதங்களிலேயே உள்நாட்டில் ஏற்பட்ட அடுக்கடுக்கான சிக்கல்களைச் சாமாளிக்க வேண்டியிருந்தது. குடியரசுக் கட்சி தேர்தலில் ஜெயித்ததை தென்னாட்டவர்கள் விரும்பவில்லை. லிங்கனால் தங்களுக்கு வாழ்வு அளிக்கும் அடிமைகள் மீட்கப் பட்டு விடலாம் என்கிற பயமும் சுயநலநோக்கமும் கொண்டவர்கள் அவர்கள் வடநாட்டின் தொடர் பையே முறித்துக் கொண்டு ஒரு குழுவை அமைத்து தனியே வாழ முற்பட்டனர். தென்னாட் டவரால் ஐக்கிய நாடு பிளவுபடா மல் இருக்க லிங்கன் பெருமுயற்சி மே ற்கொண் L– TT. மகா-4