உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மகாத்மா காந்தி முதல் ஆயினும் அதையும் மீறி தென்னாட்டவர் பிரிந்து செல்வதற்காக போராடவும் தயாராகி விட்டனர். விரும்பியோ, விரும்பாமலோ தென்னாட்ட வரின் சவாலை ஏற்று போரில் இறங்குவது லிங்கனுக்கு தவிர்க்க முடியாததாகி விட்டது. வட நாட்டாருக்கும், தென்னாட்டாருக்கு மிடையே 1861 முதல் 1865 வரை இந்தப் போர் (நான்கு ஆண்டுகள்) நீடித்தன நாடு பிளவு படுவதை லிங்கனால் ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. தென் னாட்டுப் படைகளை வெல்வதிலேயே அவரது கவனமெல்லாம் இருந்தது. இத்தருணத்தில், முன் அறிவிப்பு இன்றி 1861-ம் ஆண்டு டிசம்பா 11-ம் தேதியன்று அமைச் சரவையைக் கூட்டி விடுதலை அறிக்கையை வெளி யிட்டார். "1862-ம் ஆண்டு ஜனவரி முதல் நாளிலிருந்து அமெரிக்க வடக்கு, தெற்கு நாட்டில் உள்ள எல்லா அடிமைமக்களும் விடுதலைபெற்ற சுதந்திர மனிதர் களாகக் கருதப்படுவார்கள். கருணையோடு அடிமைகளுக்கு விடுதலையளிக்கும் முதலாளி களுக்கு ஐக்கிய அரசாங்கம் ஒரளவு நஷ்டஈடு அளிக்கும்” என்று படித்து முடித்தார்.