பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 59 லிங்கன் இந்த அறிக்கையைப் படித்து முடித்த வுடன் அவையிலிருந்தோர் அதிர்ச்சியுற்றனர்; ஆனால் அடிமை நீக்ரோக்களோ, ஆனந்தக் களிப்பில் ஆழ்ந்தனர். விடுதலை அடைந்த நீக்ரோக்கள் தங்களது நன்றிக் கடனாக உடனடியாக வடநாட்டு படை வீரர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களை இத்தனை காலம் அடக்கி ஆண்டு, கொடுமைப் படுத்திய தென்னாட்டுப படைகளுக்கு எதிராகப் போர் புரிந்தனர். ஆப்ரகாம் லிங்கன் ராணுவப் பயிற்சி பெற்றவ ரல்லர். ஆயினும், ச ம .ே யா ஜி த மா க அவர் கையாண்ட போர்த் தந்திரத்தால் திடீரென வட நாட்டின் படைபலம் பெருகி வெற்றிக்கு வழி வகுத்தது. தாக்குப் பிடிக்க முடியாத தென் னாட்டுப் படைத்தலைவர் லீ 1865-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சரணடைந்து விட்டார். போரில் வெற்றிக் கண்ட லிங்கன் தோல்வி கண்ட தென்னாட்டவரைப் பழி வாங்க எண்ண வில்லை. பகை உணர்ச்சி சிறிதும் இன்றி நாட்டின் இருபகுதியினரையும் ஒன்றுபடுத்தி, "எனக்கு எவர் மீதும் பகை இல்லை, சிதறாத பிளவுபடாத ஐக்கிய அமெரிக்க நாட்டையே நான் விரும்பு கிறேன். அது இன்று நிறைவேறிவிட்டது. அனை வரும் பகையையும், பழையனவற்றையும் மறந்து. போரில் காயமுற்றவர்களின் துயர் துடைப்போம்,