பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை --- 61 தலையில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந் தன. ஆப்ரகாம் அப்படியே கீழே ரத்த வெள்ளத் தில் சாய்ந்தார். தென்னாட்டைச் சேர்ந்தே 'ஜான்வில்கீங் பூத்” என்ற வெறி பிடித்த நடிகன் இக்கொடிய செயலை செய்துவிட்டு, தென்னாடு பழிவாங்கி விட்டது” என்று கூறிக்கொண்டே மேடைமீது தாவி ஓடினான். _ மறுநாள் காலைக், கதிரவன் தன் பொன் னொளியைப் பரப்பிக்கொண்டு எழுந்தபோது. ஆப்ரகாம் லிங்கன் என்னும் அமெரிக்கப் பேரொளி மறைந்துவிட்டது. அடிமைகளுக்கு விடுதலையளித்த வீரன் ஐக்கியநாட்டின் ஒற்றுமைக்கு அ டி கே லிய ஆப்ரகாம் மக்கள் நலனும், அவர்கள் முன்னேற்றமும், நல் வாழ்வுமே தன் லட்சியமென வாழ்ந்து வந்த லிங்கன் கொடியவனின் குண்டை ம ண் ைட யி ல் பரிசாகச் சுமந்து இம் மண்ணுலகைவிட்டு மறைந் தார்.