பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மகாத்மா காந்தி முதல் இதனால் கென்னடி மிகவும் கவலையடைந் தார். ஆயினும் அவர் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ள எண்ணவில்லை. விரைவிலே தன்னுடைய பழுதுபட்ட முது கெலும்பிற்கான சிகிச்சைகளில் ஈடுபட்டார். நன்கு உடற்பயிற்சி செய்து; தன்னை கடற் படைக்குத் தகுதியாக்கிக் கொள்ள வெகுவாக உழைத்தார். மறுமுறை கென்னடி கடற்படைக்கு விண்ணப் பித்த போது அதிகாரிகள் மறுப்பேதும் கூறாமல்; அவரது உடலை பரிசோதித்து விட்டு தேர்வு செய்து விட்டனர். அமெரிக்க கப்பற் படையில் பணியாற்றிய கென்னடி, கப்பலைப் பற்றிய துணுக்கங்களையும் போர் முறைக்கான பயிற்சிகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தார். தண்ணிரைக் கண்டால் குஷியோடு குதித்து நீச்சலடிக்கத் துவங்கும் கென்னடியின் கண் முன் னால் இப்போது எங்கு பார்த்தாலும் வெள்ளம். பரந்து விரிந்த கடல். உத்திரவின்றி அவரால் குதித்து விட முடியுமா? இந்த சமயத்தில் இரண்டாவது உலகப்போர் தீவிரமடைந்திருந்தது. ஜப்பானியர்கள் அமெரிக்