பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 67 கத் துறைமுகங்களைத் தாக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெர்ல் துறைமுகத்தை ஜப்பானியர்கள் தாக்கி னார்கள். அமெரிக்கக் கடற்படை உஷார்படுத்தப் பட்டது. போரில் ஈடுபட வேண்டி சான்பிரான்ஸிங் கோவிலிருந்து, தெற்கு பசிபிக் கடலை நோக்கி லெப்டினன்ட் கென்னடி அனுப்பி வைக்கப் பட்டார்; ஜப்பானிய கப்பற் படையினரை முன்னேற விடாமல் அங்கே நேச நாட்டுக் கப்பற் படையினர் தடுத்துப் போராடிக் கொண்டிருந்தன. 1943-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு 2 மணி. போர் பணிக்காக அங்கே வந்து சேர்ந்த லெப்டி னன்ட் கென்னடி, அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த பி. டி. 109 என்கிற அதிவேக கண்காணிப்பு படகில் ஏறி, கடலில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே துரத்தில் ஒரு ஜப்பானிய நாசகாரக் கப்பல் வருவதைக் கென்னடி கண்டார். அந்தக் கப்பல் வேகமாக முன்னேறி வந்து கொண் டிருந்தது. மிகப் பெரிய பீரங்கிகளும், பலதரப் பட்ட தாக்குதல் சாதனங்களும் பொருத்தப்பட்ட அந்த கப்பலில் இருந்தவர்கள் கென்னடியின் கண் காணிப்புப் படகை கவனித்து விட்டனர். இதை உணர்ந்த கென்னடி தனது படகை வேகமாகச் செலுத்தினார். ஆனால்