பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மகாத்மா காந்தி முதல் இன்னும் தாமதித்தால் ஆபத்து என்கிற நிலையில் மக்மானை தோளில் சுமந்தபடி நீந்தி சற்று துரத்தில் தெரிந்த ஒரு தீவுக்குச் சென்றனர். மற்றவவர்களும் கென்னடியோடு நீந்தி வந்தனர். சுமார் ஆறு மணி நேரம் நீந்தி அவர்கள் அனைவரும் அந்தத் தீவின் கரையை அடைந்தனர். அன்று மூன்றாவது நாள். கடலில் நீந்தி வந்த களைப்போடும்; உதவிப்படகு வராத ஏமாற்றத் தோடும்; தாங்க முடியாத பசியோடும்; ஒவ்வொரு வரும் தொலைவில் தெரிந்த இன்னொரு தீவிற்கு நீந்திச் சென்றனர். அங்கிருந்து இறிது தூரத்தில் இருந்த மற்றொரு தீவிற்கு நீந்திச் சென்றனர். அங்கே சில தென்னை மரங்கள் இருப்பதைக் கண்டதும் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். --- அவர்களுடைய தாங்க முடியாத தாகத்தை யும், பசியையும் அங்கிருந்த தென்னை மரங்கள் தீர்த்து வைத்தன. கென்னடியும் அவரது சகாக்கள் அறுவரும் இங்கே உதவிப் படகிற்காகக் காந்திருக்கும் வேளையில் கடற்படை தளத்தில் ஒரு இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பி. டி. 109-ல் பயணம் செய்து கண்காணிப்புக்குச் சென்ற லெப்டினென்ட் கென்னடி; மற்றும் அவரது ஆறு