பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 71 சகாக்களுக்குமாக, காப்டன் இறுதி அஞ்சலி செலுத்தி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். "எங்களை விட இன்னும் அதிக நம்பிக்கை வைத்திருந்த ஒர் இலட்சியத்திற்காகக் கென்னடி யும், அவர் சகாக்களும் உயிர் துறந்தார்கள். அவர்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப் போம்.” 1943-ம் ஆண்டிலேயே கென்னடி மாண்டு விட்டதாக எண்ணி அவருக்காக இறுதி அஞ்சலி யும், பிரார்த்தனைகளும் கூட நிகழ்ந்துவிட்டன. நான்காவது நாளும், உதவிக்கு யாரும் வராத தால், கென்னடியும் ஹராஸ் என்ற வீரரும் இன் னொரு தீவிற்கு நீந்திச் சென்றனர். அங்கிருந்த சில சுதேசிகளிடம் தங்கள் நிலையைச் சொல்லி உதவி வேண்டினர். அவர்கள் கென்னடியையும், ஹராஸையும் தங்கள் சிறு படகின் மூலம் நியூஜார்ஜியாவிலிருக் கும் நியூஜிலாந்து காலாட்படைத் தளபதியிடம் அழைத்துச் சென்றார்கள். தளபதி மூலம் அமெரிக்க கப்பற்படைக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் உதவிப் படகு வந்து சேர்ந்தது. அதன் மூலம், தனது மற்ற வீரர்களையும் அழைத்துக் கொண்டு கப்பல் தளத்திற்கு வந்து சேர்ந்தார் கென்னடி,