பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மகாத்மா காந்தி முதல் மாண்டவர்கள் மீண்டு வந்தது போல், கென்னடியையும் சகவீரர்களையும் கண்ட தளபதி யும், மற்றவர்களும் அடைந்த மகிழ்ச்சியை வர் னிக்க இயலாது. அஞ்சலி நிகழ்ச்சி நடந்த தளத்தில் மீண்டும், கென்னடிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப் பட்டது. கடற்படை அவரை அதிகாரபூர்வமாக கெளரவித்தது, துணிவு மிக்க இவரது தலைமை எல்லோராலும் பாராட்டப்பட்டது. கென்னடியின் இந்தத் தீரச் செயல்களுக்காக ‘பர்ப்பிள் ஹார்ட்” என்னும் விருது வழங்கப் பட்டது. "கென்னடியின் உறுதி; சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் நிறைந்த தலைமை - ஆகிய அருங்குணங்கள். அனேக உயிர்களைக் காப் பாற்ற உதவின”- என்று பாராட்டுப் பத்திரத்தை யும்? கடற்படை பதக்கத்தையும்; கென்னடி பெற். றா si . இதன் பிறகு உடல்நலம் கெட்டதால் தொடர்ந்து கடற்படை யில் பணியாற்ற கென்னடி யால் இயலவில்லை. ஆகவே அதை விட்டு விலகி வீடு வந்து சேர்ந்தார். சில நாட்களிலேயே கென்னடி முழுநேரமும் அரசியலில் ஈடுபடலானார். சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெயித்து 1947-ம் ஆண்டில், காங்கிரஸ் உறுப்பின