பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மகா த்மா காந்தி முதல்

  • * * *

காபட் லாட்ஜை விட 70,000 வோட்டுகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். so இந்த வெற்றியை அடைவதற்காக கென்னடி பல நாள் ஊண் உறக்கம் மறந்தார். இரவு பகல் பாராமல் அலைந்தார். குறைந்த பட்சம் பத்து லட்சம் பேர்களுடனாவது பேசியிருப்பார். ஏழரை லட்சம் பேர்களுடன் கை குலுக்கியிருப்பார். அத்தனையும் வீண்போகவில்லை. 1953-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம்தேதி செனட் அறையில் கென்னடி பதவிப் பி ர மா ண ம் எடுத்துக் கொண்டார். இந்தத் தேர்தலின்மூலம் அமெரிக்க அரசியலில் தனியிடம் பெற்ற கென்னடி அரசியல்வாதிகள் பற்றிய ஆய்வு நூல் ஒன்றை 'தீரர்களின் வாழ்க்கை” என்ற பெயரில் எழுதினார். அந்த நூல் அமெரிக்காவில் பெரிதும் மதித்துப் பாராட்ட பட்டது. இந்த நூலை எழுதியதற்காக அமெரிக்க மக்களால் பெரிதும் மதிக்கப்படும் "புலிட்சர் பரிசு’ கென்னடிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதன் மூலம் கென்னடியின் புகழ் எங்கும் பரவியது. == * * *