பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ்காந்தி வரை 75 திருமண வாழ்க்கை கென்னடி செனட்டர் ஆவதற்கு முன்பு, ஒரு பிரமாண்ட விருந்தின்போது, முதன் முதலாக மிஸ். ஜாக்குலினை கென்னடி சந்தித்தார். அந்த சந்திப்பு நாளடைவில் வளர்ந்து பெருகி அவர் களது திருமணத்தில் வந்து முடிந்தது. இத் திருமணம் நியூபோர்ட் மரியன்னை மாதாகோவிலில் 1953-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நடை பெற்றது. திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான பிரமுகர் களும், நண்பர்களும், அரசியல்வாதிகளும் வந் திருந்தனர். கென்னடியைப் போலவே ஜாக்குலின் கென்னடி யும் புகழ்மிக்கவர். பத்திரிகையாளராகவும், பிரபல புகைப்பட நிபுணராகவும்; முதல் அமெரிக்கப் பெண்மணி என்கிற பெருமையும் பெற்றவர். எல்லாவற்றிற்கும் மேலாக மிகச்சிறந்த அழகி. கென்னடி ஜாக்குலின் தம்பதிக்கு "கரோலின்’ என்ற ஒரு பெண்ணும்; ஜான் ஜான் என்ற மகனும் பிறந்தனர். வாஷிங்டனில் புதுக்குடித்தனம் நடத்தி வந்தனர், வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது, -