பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்டின் லூதர்கிங் (1929–1969) "எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. எங்கள் பாதுகாப்பிற்குரிய ஆயுதம் அஹிம்சை ஒன்றுதான். இறைவன் படைப்பில் அனவரும் சமமே. இந்த வெற்றி கிட்டும் வரை நாங்கள் அகிம்சை முறையிலேயே போராடுவோம்.' -மார்ட்டின் லூதர்கிங் "இறைவன் படைப்பில் அனைவரும் சமமேஅன்னியன் அடிமை என்கிற தளைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு நாம் அனைவரும் ஒன்று பட்ட அமெரிக்க பிரஜைகளாக வாழ வகை செய்தல் வேண்டும். கறுப்பர் என்றும், வெள்ளையர் என்றும், இனம், நிறம் இவற்றால் பிளவுபட்டு பிரிந்து வாழ எண்ணாமல் ஒரு அமெரிக்க பிரஜைக்குரிய சகல மனித உரிமைகளும் பாகுபாடின்றி கறுப்பர்களுக்கும் மறுக்கப்படாமல் வழங்கல் வேண்டும்.