பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 81 தந்தையின் பெயரும் மார்டின் லூதர் கிங் ஆகையால் மகனை, மார்டின் லூதர்கிங் ஜூனியர் என்று அழைத்தனர். தந்தை அட்லாண்டா. கிருஸ்துவ ஆலயம் ஒன்றில் மதகுருவாக இருந் தார். தாயாரின் பெயர் ஆல்பர்டா வில்லியம்ஸ் கிங்.." லூதர் கிங்கிற்கு கிறிஸ்டினா என்ற மத்த சகோதரியும், மார்டின் என்றும் ஒரு இளைய சகோதரனும் இருந்தனர். படிப்பில் கிங் மிகவும் கெடடிக்காரராகத் திகழ்ந்தார். ஆரம்பக் கல்விகளைய முடித்துக் கொண்டு தமது 15-வது வயதிலேயே அட்லாண்டா விலுள்ள "மோர்ஹவுஸ்" என்னும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் தகுதியைப் பெற்றுவிட்டார். கல்லூரியில் படிக்கும் போதே அவருக்கு கறுப்பு இனத்தலைவர்களின் மத சம்பந்தமாக ஆர்வம் ஏற்பட்டது. 1948-ஆம் ஆண்டில் படிப்பு முடிந்ததும், பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். மத ஆராய்ச்சிக்கான பி.எச்.டி (Ph.D.) டாக்டர் பட்டத்தை 1955-ஆம் ஆண்டில் பெற்றார். திருமண வாழ்க்கை பாஸ்டன் கல்லூரியில் படித்துக் கொண் டிருந்தபோது அதே கல்லூரியில் இசை பயின்று