இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82 மகாத்மா காந்தி முதல் கொண்டிருந்த கொரிட்டா ஸ்காட்"டை 1953ஆம் ஆண்டு கிங் மணந்தார். இனவெறிக்கு எதிர்ப்பு அலபாமா மாநிலத்தில், மாண்ட் கோமரி நகரத்தில் பஸ்ஸில் பயணம் செய்யும் றுெப்பர் களுக்கும், வெள்ளையர்களுக்கும் தனித்தனியாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பஸ்களின் பின்புறத்தில் தான் கறுப்பர்கள் அமரவேண்டும்; அல்லது நிற்கவேண்டும் என்பது விதியாகும். பயணம் செய்யும் பஸ்களில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறைக்கு கிங் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு சமயம் ரோசா பார்க்' என்னும் கறுப்புப் பெண்மணி பஸ்ஸில் வெள்ளையரது இடத்தில் அமர்ந்து விட்டதால்-சட்டத்தை மீறி விட்டதாக கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் கிங்கின் மனதைப் பெரிதும் பாதித்தது. கறுப்பு இனத்தவர்கள் ஒற்றுமையாக கிங் தலைமையில் திரண்டு; அரசுக்குத் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.