ராஜீவ் காந்தி வரை - 83. தமது போராட்டத்தை கிங் தொடர்ந்து நடத்தினார். தன் ஆதரவாளர்களிடம கிங் தமது முதல் பேச்சிலேயே, "வன்முறைக்குச் சிறிதும் இட மளிக்காமல் அஹிம்சையையே அனைவரும்கடைப் பிடிக்கவேண்டுமென்று” கோரினார். கிங் அரசுக்கு அனுப்பிய தமது அறிக்கையில், பின் வருமாறு: எழுதியிருந்தார்: "அமெரிக்க ஜன நாயகத்தின் மாண்பு என்ன வெனில் மக்கள் உரிமைக்காகக் கண்டனக் குரல் எழுப்புவதேயாகும்." "எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கைஇல்லை. எங்கள் பாதுகாப்பிற்குரிய ஆயுதம் அஹிம்சை ஒன்றுதான். வெற்றிகிட்டும் வரை நாங்கள் அஹிம்சை முறையிலேயே போ ராடுவோம்,' என்று உறுதியுடன் கூறினார். கருப்பர்கள் அனைவரும் பஸ்களில் பயணம் செய்யாது புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்; முதல் வெற்றி 1956-ம் ஆண்டு பஸ்களில் கறுப்பர்களுக்கும் சமத்துவமுள்ள இடங்களை ஒதுக்குமாறு அமெ ரிக்க உச்ச நீதி மன்றம் (சுப்ரீம் கோர்ட்) உத்தர விட்டது. இன அடிப்படையில் இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடியதில் கிங் அடைந்த இந்த
பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/85
Appearance