பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மகாத்மா காந்தி முதல் வெற்றி அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது! அந்த கால கட்டத்தில் தென் மாநிலங்களில் பஸ்களில் மட்டுமின்றி, பள்ளிகள், பொழுது போக்கு இடங்கள்; ஒட்டல்கள் போன்றவற்றிலும் இன ஒதுக்கல் தீவிரமாக நிலவியது. கறுப்பர்களின் ஒட்டு உரிமையைப் பறிப்பதற் காகப் பல மாநிலங்களில் முயற்சிகள் நடை பெற்ற வண்ணமிருந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டே இருந்தனர். ஆயினும் நிலைமையில் சிறிதும் முன்னேற்றம் இல்லை. கறுப்பர்களைப் பற்றி அரசு கண்டும் காணாதது போல் நடந்து கொண்டது. அமெரிக்காவில் 1950 முதல் 1960 வரையுள்ள பத்தாண்டுகளில் சிவில் உரிமைகள் இயக்கத்தின் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவர் மார்டின் லூதர் கிங் தான். மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் நடத் திய சத்தியாகிரகப் போராட்டங்களைப் பற்றி கிங் அறிந்திருந்தார். காந்திஜி கையாண்ட அஹிம்சா முறையையும், சத்தியத்தையுமே மார்டின் லூதர் கிங்கும், தனது போராட்டங்களின் போது முற்றி லுமாகப் பின் பற்றினார்.