உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை - 85. சமூக நீதி கோரிய நீக்ரோ இன மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக அவர் குரல் எழுப் பினார். தனது நேர்மையாலும், சேவைத் திறத்தி னாலும், சாதுர்யமுள்ள இனிய சொற்பொழிவு. களின் மூலமும் வெள்ளையர் உட்பட அனைத்து மக்களின் ஆதரவையும் திரட்டிய மார்டின் லூதர் கிங் உலகப் புகழ் பெற்றார். லூதர் கிங் அஹிம்சையில் அசையாத உறுதி. யும் நம்பிக்கையும் கொண்டிருந்தாலும்: அவர் பல முறை வன் முறைக்கு ஆளாக்கப்பட்டார். வெள்ளை இன வெறியர்கள் தெருக்கற்களைப் பொறுக்கி அவர் மீது சரமாரியாக வீசித். துன்புறுத்தியதுண்டு. மாண்ட் கோமரியில் உள்ள அவரது வீட்டை வெடிகுண்டு வைத்துத் நகர்த்தனர். ஆயினும் அவர் சிறிதும் மன உறுதி குலையவில்லை. 1963-ஆம் ஆண்டில் இதே சிங் தலைமை தாங்கி தமது ஆயிரக்கணக்கான ஆதரவாளர் களுடன் பர்மிங் ஹாம் நகரில் பெரும் பேரணி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். இனவெறி தலை விரித்தாடும் நகரமாக பர்மிங்ஹாம் நகரம். திகழ்ந்து கொண்டிருந்தது.