பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மகாத்மா காந்தி முதல் வெள்ளையருக்கு மட்டுமே-என்று தனியாக ஒதுக்கப்பட்ட பல இடங்களில் கறுப்பர் இன மாணவர்கள் நுழைந்து தங்கள் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவிக்கத் தொடங்கினர். அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எஃப் கென்னடி சிவில் உரிமைகளுக்கு உதவி யாக அவர் போதுமான நடவடிக்கைகள் எடுக்க வில்லை என கிங் கருதினார். இதனைக் கண்டித்தே கிங் தமது பெர்மிங் ஹாம் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார், உரத்த கோஷங்களுடன் அமைதியாகப் பேரணி நடத்தியவர்கள் மீது போலீசார் நாய் களை ஏவி விட்டனர்; கண்ணிர் குண்டுகளை வீசி னர்: தண்ணிர் பீய்ச்சி தடியால் அடித்தனர், பேரணியில் பங்கேற்ற ஏராளமான குழந்தை களும், பள்ளி மாணவர்களும், தாய்மார்களும் மிருகத்தனமாக போலீசாரால் தாக்கப்பட்டனர். நகர வீதியில் ரத்தம் பெருக் கெடுத்தோடியது. இந்த துயரச் செய்தி பத்திரிகைகளில் கொட்டையெழுத்துக்களில் பி ர சு ர மா யி ன. வானொலியும், டெலிவிஷனும் படம் பிடித்துக் காட்டின. இது உலக மக்களின் மனதை நெகிழச் செய்து, கிங்கிற்கு ஆதரவைக் கூட்டின.