பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 87 இதனையடுத்து - உடனடியாக ஜனாதிபதி, தமது உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தார். சிவில் உரிமைக்களுக்கான உத்தேச சட்ட மசோதாவைத் தயாரித்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். வாஷிங்டன் பேரணி ஜனாதிபதி கென்னடியால் நாடாளுமன்றத் துக்கு அனுப்பப்பட்ட சிவில் உரிமை சட்ட மசோதா, கிடப்பில் போடப்பட்டது போல் கேட்பாரற்று இருந்தது. கென்னடியின் ஒப்புதல் மசோதாவை நாடாளு மன்றத்தை நிறைவேற்ற கோரவும், கருப்பர்களின் வேலையின்மைப் பிரச்னையை அரசுக்கு உணர்த்த வும் கிங் ஒரு பேரணியை நடத்தினார். இதில் பிற சிவில் ஆதரவாளர்களும் கிங் தலைமையில் இணைந்து கொண்டனர். 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி நடை பெற்ற இந்த மாபெரும் பேரணியில் பங்கேற்க நாட்டில் பல பாகங்களிலுமிருந்தும் மக்கள் ரயிலிலும், பஸ்ஸிலுமாக சுமார் இரண்டரை இலட்சம் அமெரிக்க நீக்ரோக்கள் கிங் தலைமையில் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும், கோஷமெழுப்பியபடிஆனால் அமைதியாக அணிவகுத்தபடி நகர வீதி