பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மகாத்மா காந்தி முதல் அவரது அந்த இயக்கம் மாபெரும் வெற்றி யைத் தேடித் தந்தது. நிறைவேற்றப்பட்ட இப்புதிய சட்டத்தின்படி பொது இடங்களில், எந்த நிலையிலும் இனவேறு பாடு காட்டப்படுவது தடை செய்யப்பட்டது. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஏற்றத்தாழ் வின்றி சம வாய்ப்புத்தர இச்சட்டம் வகை செய்தது. அன்றையச் சூழ்நிலையில் இது எவராலும் எண்ணிப் பார்க்க முடியாத சாதனை, அதை அன்பாலும், அஹிம்சையாலும், அறநெறியோடும் கிங் சாதித்தார். இதற்கு அவர் கொடும் வேதனை களையும், கடும் சிறை வாசங்களையும், பயங்கரத் தாக்குதல்களையும் மகிழ்ச்சியோடு ஏந்றுக் கொண் I - ГТПГ. நோபல் பரிசு இதே 1964-ஆம் ஆண்டு நோபல் சமாதானப் பரிசை லூதர் கிங் பெற்றார். சிவில் உரிமைகளுக்காக அஹிம்சா முறையில் போராடியும், ஆர்ப்பாட்டங்களும், அமைதிப் பேரணிகளும் நடத்தியதற்காக அவர் இந்த அரிய சமாதான விருதைப் பெற்றார்.