பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 91 வாக்குரிமையும் வாழும் உரிமையும் இதனை அடுத்து 1965-ஆம் ஆண்டில் வோட்டுரிமை சட்டத்தை அமெரிக்க நாடாளும் மன்றம் நிறைவேற்றுவதற்கு முக்கிய பங்காற்றினார் கிங். இதன் மூலம், கறுப்பு இனத்தவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்கைப் பிரஜைகளின் அந்தஸ்தைப் பெற்று: வாக்களிக்கும் உரிமையையும் பெற்றனர். சிக்காகோவில் சீர்திருத்தம் இப்பொழுது லூதர் கிங்கின் சிந்தனை முழு வதும். அமெரிக்க நீக்ரோ இன யக்களின் நல வாழ் வினைப் பற்றியே சிந்தித்த வண்ணம் இருந்தது. இந்த சமயத்தில் கறுப்பர்களின் நலவாழ்விற் காக சிகாகோவில் நடைபெறும் அமைப்பிற்கு உதவிட கிங் சிக்காகோ சென்றார். கறுப்பர்களின் சுகாதார மற்ற நகர்புற குடி யிருப்புகள், வசதியற்ற பள்ளிக்கூடங்கள், வேலை யின்மை, போன்ற குறைகளைச் சீரமைக்கக் கோரி சிக்காகோ நகரப் பகுதிகளில் போராட்டங்கள் நடத்திட கிங் முன்னின்று உதவினார். வெள்ளையர்கள் வாழும் பகுதிகளில் நீக்ரோக் களின் ஊர்வலங்கள் செல்லும் போது ஆத்திர