92 - மகாத்மா காந்தி முதல் மடைந்த வெள்ளையர்கள் ஊர்வலத்தினர் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி விரட்டியடித் தனர். * ஆனால் கிங் அசைந்து கொடுக்கவில்லை. அமைதி குலையாமல் தன் பேரணியினை நடத்தி னார். கட்டுப்பாடாக சிக்காகோவின் அழகிய வீதி களில் பெரும் கோஷங்களை எழுப்பிய வண்ணம் கிங்கின் பின்னால் நீக்ரோ மக்கள் ஒன்று திரண்டு, தலை நிமிர்ந்து நின்றனர். நிலைமையை உணர்ந்த சிக்காகோ நகர உயர் அதிகாரிகள் இறங்கி வந்தனர். கிங்கிடம் ஆர்ப் பாட்டத்தை நிறுத்தும்படிக் கேட்டுக் கொண் டனர். கறுப்பர்களுக்கு சுகாதார முறையிலான குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்கவும்-பள்ளி 6), G75) аTT சீரமைக்கவும்-நீக்ரோக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கவும் உயர் அதிகாரி கள் ஒப்புக் கொண்டு வாக்களித்தனர். இதையடுத்து கிளர்ச்சி கைவிடப்பட்டது. இது கிங்கிற்குக் கிடைத்த மற்றொரு வெற்றி யாகும். புதிய இயக்கம் மாணவர் அஹிம்சை ஒருங்கிணைப்புக் குழு (SNCC) என்ற அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள்
பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/94
Appearance