பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 93 நீக்ரோ இனத்தவர்களிடம் வன்முறைப் பிரசாரத் தைத் துண்டியது கிங்கிற்கு மன வருத்தத்தை அளித்தது. அவர்கள் "கறுப்பர்களின் அதிகார சக்தி” என்ற முழக்கத்தை ஊக்குவித்தனர் (Black Power). 1967-ஆம் ஆண்டில் அமெரிக்க சமுதாய முறை கள் குறித்து கிங் கடுமையாக விமர்சித்தார். செல்வத்தை ஏழைகளும் பணக்காரர்களும் பகிர்ந்து கொள்வதன் மூலமே உண்மையான சமூகநீதி மலரும் என்றார். பொருளாதார முன் னேற்றத்திற்கு வகை செய்யும் ஒர் இயக்கத்தை உருவாக்க அவர் விரும்பினார். எல்லா இனங்களையும் சேர்ந்த ஏழைகளையும் ஒன்று திரட்டுவதே அவரது நோக்கமாகும். வியட்நாம் போரில் அமெரிக்க அரசு தென் வியட்நாமை ஆதரிப்பதை கிங் கண்டித்தார். அவரது நிலை சரியானதே என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிங்கின் உடல் டென்னஸி மாநிலத்தில் உள்ள மெம்பிஸ் நக குக்கு; வறுமையில் சிக்கித்தவிக்கும் அன்றாடக்கூலி ஏழை மக்களின் இயக்கம் தொடர்பாக ஆதரவு திரட்ட மார்டின் லூதர் கிங் சென்றார்.