பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 95 'கடைசியில் விடுதலை யானேன், எல்லாம் வல்ல இறைவனே! கடைசியில் நான் சுதந்திரமடைந்து விட்டேன்.” கிங் மறைந்தாலும் அவர் லட்சியங்கள் வாழும் கிங்கின் மறைவுடன. சிவில் உரிமை இயக்க யுகமே முடிந்து விட்டதாக சிலர் கருதியதுண்டு. ஆனால், அவர் மறைவிற்குப் பின்னும் அவரது பாணியில் இயங்கிக் கொண்டுதான் இருந்தது, தென் மாநிலங்களில் கறுப்பர்-வெள்ளையர் கலந்து பயிலவும்; பழகவும் நிலவிய தடைகள் நீங்கு வதற்கு அவரது இயக்கம் வழி வகுத்தது. அமெரிக்காவின் பெரும் பகுதிகளிலும் குடி யிருப்பு வாடகைக்கு விடுவதிலும், விற்பதிலும்; இனப் பாகுபாடு காட்டக் கூடாது என்ற சட் டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் இயக்கியது. இது கிங்கின் இயக்கத்திற்குக் கிடைத்த இன் னொரு வெற்றியாகும். ஓர் அரசன் ஆழ்ந்த துயில் கொள்கிறான் 1980-ஆம் ஆண்டில் அட்லாண்டாவில் உள்ள கிங்கின் கல்லறையை அரசு விரிவு படுத்தி, அந்தப்