பக்கம்:மகான் குரு நானக்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மகான் குருநானக்


மேய்ப்பன் மேற்பார்வை இல்லாமலேயே மாடுகள் மேயும், பிறகு மாலைதோறும் அவ்ற்றைத் தொழுவத்திலே ஒட்டி வந்து கட்டி விடுவார்.

நாட்கள் இவ்வாறு உருண்டோடின. தந்தை மேதாகலூராய்க்கு இந்தக் காட்சி ஆனால் மகனுக்கு இந்த வேலை ஏதோ ஓர் இழிவான வேலை என்று தெரியவில்லை. தெய்வத் தொண்டாக தோன்றியது செய்யும் தொழில்.

கிறித்துவ மத நிறவனரான இயேசு நாதருக்கு மேய்ப்பர் என்று ஒரு பெயரும் உண்டல்லவா? ஏன் வந்தது அந்தப் பெயர் அவருக்கு? அவரும் ஆட்டுக்குட்டிகளை மேய்த்தவர் அல்லவா? அவரைப் போல நாமும் மாடுகளைத் தானே மேய்க்கின்றோம். அதனால் தவறில்லையே.

ஆயர்பாடியிலே, பாரத காலத்துக் கண்ண பெருமான் மாடுகளை மேய்த்தாரே அதனால் அவருடைய தெய்வாம்சப் புகழும் பெயரும் கெட்டா போய்விட்டது? யார் எந்தெந்தத் தொழில்களைச் செய்தாலும், அவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் தானேயென்று எண்ணிய நானக், மாடு மேய்க்கும் தொழிலை ஒரு பேரானந்தப் பிழைப்பாகவே எண்ணிச் செயல்பட்டார்.

ஒரு நாள் வழக்கம் போல மாடுகளை மேய்த்திட ஒட்டிச் சென்ற நானக், அவற்றை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு, இறைஞானச் சிந்தனையிலே ஆழ்ந்து விட்டார். நேரம் பகலானது கடும் வெயில் உலகைச் சுட்டெரித்தது. பசி மறந்தார். சாப்பாட்டை மறந்தார். பட்ட மரத்தின் வெயில் வெப்பம் தன்னைத் தாக்குவதையும் மறந்த நிலையில் அவர் கடவுள் சிந்தனையிலே மிதந்தார்.

வயல்புற வரப்புகள் ஒரமாக மேய்ந்து கொண்டிருந்த மாடுகள், திடீரென வயலில் இறங்கி, பயிர்களை மிதித்து, துவைத்து, வயிறு முட்ட மேய்ந்து, பயிர்களைப் பாழ்படுத்திவிட்டன.