பக்கம்:மகான் குரு நானக்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. தெய்வம் ஒன்றே

மிழ் சித்தர்கள் தவங்களை இயற்றி, யோகிகளாக மாறி, தமிழ்ப் பண்பாடுகளுக்கு ஏற்றவாறு ஆன்மீகத் தத்துவங்களை வளர்த்து, மக்களுக்கு இறைஞானத்தைப் போதித்தார்களோ, அதே போன்ற கொள்கைகளை, சித்தாந்தங்களை வட நாட்டு மக்களுக்கும் கூறிட கடுந்தவமியற்றிய கர்ம யோகி குருநானக்கென்ற ஞானி பஞ்சாப் மாநில மக்கள் அவரை அவதார புருஷர் என்றார்கள். நானக்கின் தந்தைக்கோ நம்பிக்கை ஏற்படவில்லை.

அவர் வாழ்ந்த ஊர்த் தலைவரான ராய் புலார், தான் கண்ட அற்புதத்தை அவரது தந்தையிடம் நேருக்கு நேர் கூறிய போதும்கூட, நானக் தந்தைக்கு நம்பிக்கை உருவாகவில்லை. மாறாக, மகன் மீது மட்டற்ற கோப உணர்ச்சியே கொண்டிருந்தார். அதற்கு அவர் காரணம் கூறும் போது, மாடுகளை மேய்க்கச் சென்றவனுக்குத் தொழிற்கடமை, பொறுப்பு இருந்தால் மாடுகள் வயலிலே புகுந்து மேய்ந்து துவம்சம் செய்யுமளவுக்கு விட்டிருப்பானா என்பது போன்ற உளுத்துப் போன காரணங்களை அவர் பேசிக் கொண்டே இருந்தார். பலர் பல உண்மைகளைக் கூறியும் அந்த பழமை விரும்பி மாறாமலே இருந்தார். குருநானக்கின் தந்தை அவனை மாடு மேய்க்க விட்டது பெரும் தவறு என்று எண்ணி மாடு மேய்க்கும் தொழிலுக்குப் போக வேண்டாமென்று எண்ணினர்.

நானக்கும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றபடி தனது தலையை ஆட்டி இனி போக மாட்டேன் என்ற அடையாளத்தைத் தந்தைக்கு உணர்த்தி விட்டார். இப்போது அவருக்கு நேரம்