பக்கம்:மகான் குரு நானக்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

25


கிடைத்தது. தியானத்திற்கு நிறைய நேரம் செலவழித்தார். தந்தை அதைக் கண்டு வருத்தமுற்றார்.

நானக் வயது பதினாறு - பதினேழானது அதற்காக தனது குடும்பம் மீது பற்றோ, பொறுப்போ ஏதுமே எழவில்லை அவருக்கு ஒருநாள் தந்தை நானக்கைக் கூப்பிட்டு, 'மகனே! பொருளில்லார்க்கு இந்த உலகம் இல்லையப்பா! அடுத்த உலகமான அருள் உலகத்தையே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்! தவறு மகனே அது பொருள் இல்லா ஏழையை எவனும் மதிக்கமாட்டான். அருள் உலகத்து நடவடிக்கைகளின் வழிபாடு களைச் செய்யக் கூட பொருள் தேவையப்பா வெறும் யோகமும், தியானமும் செய்வதால் பொருள் வராது; சேராது. எனவே, விவசாயமாவது செய்! வளமாக வாழ்வாய்! இப்படியே ஆன்மீகவாதியாக இருந்தால், நான் செத்ததற்குப் பிறகு நீ மிகவும் துன்பப்படுவாய் நானக். நன்றாக யோசனை செய் மகனே என்று கெஞ்சாத குறையாய் மகனிடம் கூறினார்.

தந்தையே! நான் இப்போது விவசாயம் செய்து கொண்டு தான்னே இருக்கின்றேன். விடாமுயற்சியோடும், பக்தியோடும் நான் வேளாண்மை செய்து கொண்டுதான் இருக்கின்றேன். உண்மையப்பா இது நம்புங்கள் என்னை என்றார் நானக்.

திருதிருவென விழித்தார் மேதாகலூராய். "என்னப்பா சொல்கிறாய்? விவசாயமா செய்து கொண்டு இருக்கிறாய்? அதனால் பெற்ற லாபம் என்ன?" என்று நானக்கின் தந்தை தன் மகனைக் கேட்டுவிட்டு, இவனுக்கு ஏதாவது சித்தப் பிரமை ஏற்பட்டிருக்குமோயென்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்போது நானக் "அப்பா, எனது உடலே வயல், உள்ளெளியே உழவன் அடக்கம் என்ற நீரைப் பாய்ச்சுகின்றேன்; தெய்வீகம் என்ற விதையை விதைத்துக் கொண்டிருக்கிறேன். அன்பு எனும் பயிர் முளை கிளம்புகிறது. உண்மை எனும் இடத்திலே இருந்து அதைக் காத்து வருகிறேன். மகிழ்ச்சியின் பெருங்களிப்பே எனக்கு கிடைக்கும் ஊதியம். அந்தக் களிப்பே