பக்கம்:மகான் குரு நானக்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

29


வாலிபன் சாதாரணமான ஒரு சிறுவனல்ல. மக்களை ஞான வழியில் திருப்ப வந்த ஒரு தீர்க்கதரிசி, அதனால், அவர் உடல்நலத்தைப் பற்றி அக்கறை கொள்ள அவசியமில்லை" என்று மருத்துவர் நானக்கின் தந்தையிடம் கூறிவிட்டுச் சென்றார்.

சரக்குகளை விலைக்கு வாங்கி மற்ற கடைக்கு விநியோகம் செய்ய நானக்கிடம் 20 ரூபாய் கொடுத்து சந்தைக்கு அனுப்பி வைத்தார் தந்தை.

மகன் நானக், தனது நண்பனுடன், தந்தை கூறிய அறிவுரைக்கேற்றவாறு அடுத்த ஊரிலே கூடும் சந்தைக்குச் சென்றார். அப்போது அவர் சென்ற வழியிலே சாமியார்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு ஒரே பசி! கையிலே பணமில்லை! அதனால் களைத்து ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து விட்டார்கள்.

என்ன காரணம்? ஏன் இப்படிச் சோர்ந்து படுத்துவிட்டீர்கள் என்று நானக் அவர்களை விசாரித்தபோது, சாமியார்கள் பசியால் களைத்து நடக்க முடியாமல் படுத்துக் கிடக்கும் விவரத்தை அறிந்து கொண்டார். தனது நண்பர் பாலாவிடம் தந்தை கொடுத்த இருபது ரூபாயையும் கொடுத்து, சாமியார்கள் பசியைப் போக்கிட ஏதாவது உணவுகளை வாங்கி வருமாறு பக்கத்து ஊருக்கு அவரை அனுப்பி வைத்தார். சாமியார்களின் பசியை நானக் தீர்த்தார்.

இருபது ரூபாயை வியாபாரத்திற்காகப் பெற்றுச் சென்ற மகன் திரும்பி வருகிறானே, எவ்வளவு லாபம் சம்பாதித்து வந்திருக்கிறானோ என்ற ஆசையோடு ஓடி வந்து, மகனே சென்றாயா சந்தைக்கு? சரக்குகளை வாங்கி மற்ற கடைகளுக்கு விற்று எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்? என்று தந்தை கேட்ட போது, சாமியார்களுக்கு பசிதானம் செய்துவிட்ட மன நிறைவோடு வந்த நானக், வெறுங்கையோடு வந்ததைக் கண்டு தந்தைக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. அப்போது நானக் நண்பன் பாலா நடந்த விவரத்தை மேதாகலூராயிடம் கூறினார். நானக்கின் தந்தை அவன் சொல்வதைக் கேட்டவாறே நானக்கைப் பார்த்தார். அவர் பத்மாசனத்தில் ஆழ்ந்து இருந்தார்.