பக்கம்:மகான் குரு நானக்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மகான் குருநானக்


அந்த காகிதத்தில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? எது உண்மை, 'எது பொய்?' என்பதே அந்தக் காகிதத்தில் எழுதப் பட்டிருந்த சொற்றொடர்கள். எனவே, அந்தக் காகிதத்தை எடுத்துக் கொண்டு மர்தானா நகருக்குள் நுழைந்தான்.

யார் யார் தன்முன் எதிர்பட்டார்களோ அவர்களிடம் எல்லாம் அந்தக் காகிதத்தைக் காட்டினான். அதன் உட்பொருள் எவருக்கும் புலப்படாதது மட்டுமன்று, படித்தவர்களில் பலர் அவனைப் பற்றி மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். சிலர் அலட்சியமாகச் சென்றனர். வேறு சிலர் கேலியாகவும், கிண்டலாகவும் பேசிக் கொண்டார்கள். ஒருவரும் உணவு தர முன் வரவில்லை. பசி அவனை நறநறவென்று மென்று கொண்டே இருந்தது.

இறுதியாக, ஒரு ரொட்டிக் கடைகாரனை மர்தானா அணுகி காகிதத்தைக் காட்டினான். அவன் அந்த சொற்களைப் படித்தான். எடுத்தான் எழுதுகோலை. உடனே எழுதினான் பதிலை. வாழ்க்கை என்பது பொய் மரணம் தான் மெய் என்று. காகிதத்தை மர்தானாவிடம் திருப்பிக் கொடுத்தான். அவனுக்கு வேண்டிய உணவுகளை வயிராறக் கொடுத்தான். அவனும் உண்டு மகிழ்ந்தான். ரொட்டிக் கடைக்காரன் மர்தானா பசியாறிய பின்பு தன்னருகே அழைத்து, இந்தக் கேள்விகளை எழுதியது யார் என்று கேட்டான். அதை எழுதியவர் எனது மதிப்பிற்குரிய குருநானக்தான் என்றான் மர்தான ரொட்டிக் கடைக்காரன் நானக்தான் எழுதினார் என்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான். உடனே, சத்குரு நானக்கை நேரில் பார்ப்பதற்கு கடைக்காரன் புறப்பட்டான்.

இருவரும் ஒரு காட்டிற்குள் சென்றார்கள். நானக்கைக் கண்ட ரொட்டிக் கடைக்காரன் மகிழ்ச்சியின் சிகரத்திற்கே சென்றான். அந்த மகிழ்ச்சிக்கு இடையில் கடைக்காரன் அக்கேள்விகளை நானக்கைப் பார்த்து சத்குருவே எனக்கும் ஓர் உண்மை வழியைக் காட்டுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.

ரொட்டிக் கடைக்காரன் சத்குரு நானக்குடன் சில நாட்கள் தங்கியிருந்தான். எது உண்மையான வாழ்க்கை என்பதை நானக் அவனுக்கு எடுத்துரைத்து உணர்த்தினார். பிறகு, அதற்குரிய