பக்கம்:மகான் குரு நானக்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மகான் குருநானக்


தாலும், அந்த முதலாளி அவனது கருத்தை அப்போது அலட்சியப் படுத்திப் பேசியிருப்பான். அதனால் அவன் அவரைப் பற்றிய எந்த விஷயத்தையும் தனது முதலாளியிடம் கூறாமல் இருந்து விட்டான்.

வட்டிக் கடைக்காரன் குதிரை கீழே விழுந்ததும், அவனுக்குக் கண் பார்வை தெரிந்தும்கூட எல்லாமே இருட்டாகவே இருந்ததாலும், அவன் யோசனை செய்ய ஆரம்பித்தான். அந்த நேரத்தில்தான் வேலைக்காரன், சத்குரு யார்? அவர் எப்படிப்பட்ட மகான் என்பதை எல்லாம் முதலாளிக்கு விவரமாக விளக்கினான்.

வேலைக்காரன் கூறிய விவரங்களை அறிந்த வட்டிக் கடைக்காரன். அப்படிப்பட்ட ஞானியா அவர்? என்று திணறிப் போய், குதிரையை விட்டு இறங்கி, அதைக் கையிலே பிடித்துக் கொண்டு, தனது பணியாளனோடு நானக் ஞானியிடம் சென்றான். சத்குரு பாதத்திலே விழுந்து, கதறி, பதறி அழுதான். தன்னை மன்னிக்க வேண்டும் குருதேவா என்று கேட்டுக் கொண்டது மட்டுமன்று. அவனுக்கு ரவி நதிக்கரையில் இருந்த நிலம் முழுவதையும் அவரது மார்க்கத் தொண்டுக்கே உரிமையாக்கி விட்டான்.

அதைக் கேட்ட சத்குரு நானக், “எனது அன்பனே! இந்த இடம் உனக்கும் எனக்கும் உரிமையானதன்று! இறைவனுக்கே சொந்தமானது. இறைவன் தொண்டுக்காக நீ வழங்கிய இந்த இடமெல்லாம் அவரது திருப்பணிக்கே பயன்படப் போகிறது. எனவே, இந்த இடத்திற்கு இறைவன் இருப்பிடம் என்ற பெயர் திகழ்வதாக, கடவுள் இருப்பிடமான இந்த இடத்திற்கு கர்தர்பூர் என்று பெயரிடுகிறேன் என்று சத்குரு கூறினார்.

வட்டிக்கடைக்காரன் கரோரியா, மீண்டும் பழைய கண் பார்வையைப் பெற்று தனது இருப்பிடம் சென்றான். கரோரியா கொடுத்த அந்த நிலப்பகுதிகளை குருநானக் விரும்பியதைப் போல கடவுள் பணிக்கே மக்கள் பயன்படுத்தினார்கள்.

சத்குரு எண்ணத்தின்படி அந்த கர்தர்பூர் எனும் கரோரியா இடத்தில்தான், குருத்து வாரம் என்ற சீக்கிய மதத் திருக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோவிலில் சாதிமத இன பேதங் -