பக்கம்:மகான் குரு நானக்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

53


களின்றி மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, முதன் முதலாக கூட்டு வழிபாடுகள் நடப்பதற்கான வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது.

கோவில் இருந்தால் மட்டும் போதுமா? அந்தக் குருத்துவாரம் கோவிலைச் சுற்றி மக்கள் குடும்பம் குடும்பமாகக் குடியேறி னார்கள். அவர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டன. குரு தேவர் நானக்கைப் பார்க்க வருபவர்கள் தங்குவதற்கான விருந்தினர் இல்லங்கள் கட்டப்பட்டன. பக்தர்கள் பெருமளவு அந்த இடத்திற்கு வந்து போகும் புனித ஸ்தலமாக கர்தர்பூர் மாறிவிட்டது.

சத்குரு நானக் மறுபடியும் இல்லற வாழ்க்கையைத் துவக்கினார். தனது அருமை மனைவியான சுலாகனி அம்மையையும், செல்வங் களான பூரீசந்த், லட்சுமி சந்த் ஆகியோரையும் அழைத்து வந்து கர்தர்பூர் குருத்துவாரம் அருகே குடியமர்த்தினார். துறவற வாழ்வை நீங்கி மீண்டும் இல்லறவாசியானார் சத்குரு.

வீடு பேறு பெறவோ, இறை வழிபாடு செய்யவோ துறவறம் தான் சரியான மார்க்கம் என்பதை அகற்றி, இல்லறவாசியாக இருந்து கொண்டே இறைவழிபாடு செய்யலாம். வீடு பேறும் பெறலாம் என்ற திருவள்ளுவர் பெருமானது எண்ணப்படி, வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தால் வானுறையும் தெய்வத்தின் இடத்தைப் பெறலாம் என்ற வாழ்க்கையைச் சத்குரு வாழ்ந்து காடடினாா.

நானக் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்யலானார்! குருத்துவாரம் கோவிலுக்கு வருகின்ற இறைபக்தர்கள் கூட்டம் நாள்தோறும் பெருகலாயிற்று. கோவில் வழிபாட்டுக்கு வருகை புரிவோர் எல்லாம் சத்குரு நானக்கைக் கண்டு தரிசித்துச் சென்றவாறே இருந்தார்கள். சத்குரு, தன்னைத் தேடிவரும் இறையன்பர்களுக்குரிய வாழ்வியல் ஞானபோதனைகளை யாற்றி, அறவாழ்க்கை வழிகளைக் கூறி, கடவுளையே எண்ணி யெண்ணி வீடுபேறு பெறுமாறு போதாந்த உரையாற்றி வந்தார்.

சத்குரு நானக், வயலில் இறங்கி உழுவார்; விதைப்பார் நாற்று நடுவார்; களை களைவார்; அறுவடை செய்வார் இறைவழி பாடுகளை மக்களுக்குக் கூறும் போல துறவியாக, போலி ஞானியாக, போலி ஆன்மீக போதகர்களைப் போல அல்லாமல்,