பக்கம்:மகான் குரு நானக்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மகான் குருநானக்


அந்த மகானே விவசாயியாக மாறி எல்லாப் பணிகளையும் மற்றவர் உதவிகளின்றி அவரே உழைத்து உழைத்து உழைப்பின் அருமையை, பெருமையை உலகுக்கு உணர்த்தினார்.

விவசாயத் தொழிலில் அவர் உழைப்புக்கான ஊதியத்தைத் தனது குடும்பத்துக்கு எடுத்துக் கொண்டு, மீதியிருக்கும் தானிய வகைகளை குருத்துவாரம் கோவிலுக்கு வரும் பக்தர் பெரு மக்களுக்கும் உதவும் வகையில் உணவு படைப்பதற்காக வழங்கி விடுவார்.

அல்லும் பகலும் அந்த மகானைக் காணவரும் இறை தோண்டர்கள், வாழ்வுக்கு வழி தெரிந்து கொண்ட அறிவோடு - வயிற்றுக்கும் உணவு பெற்றுச் சென்றனர். இப்படிப்பட்ட இறைஞானத் தொண்டர், தனது குடும்பத்துக்கோ, தனது உறவுகளுக்கோ எதையும் சேர்த்து வைக்கும் வழிகாட்டியாக வாழாமல், பொது மக்கள் தொண்டராகவே வாழ்ந்து காட்டினார். சத்குரு நானக்கின் இறை வழிபாடு ஞானம் வட இந்தியா முழுவதும் பரவியது மட்டுமல்ல, இமயமலையையும் தாண்டி அவரது கடவுள் தொண்டுகள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், நீண்ட நெடுந்தொலை துரத்தில் இருந்து வந்த மக்கட் கூட்டம் ஒன்று குரு நானக்கை நேரில் பார்த்து மகிழ வேண்டும் எனும் ஆசையிலே குருத்துவாரம் வந்தது. அப்போது நானக் வயலிலே ஏர் உழுது கொண்டு உடம்பெல்லாம் ஒரே சேறுமயமாக இருந்தார்.

அந்த நேரத்தில்தான், சத்குருவைக் காண வேண்டுமென்ற மக்கள் கூட்டம் அவரைத் தேடிவந்து, அவரிடம் "நாங்கள் சத்குரு நானக்கைப் பார்க்க வேண்டும். எங்கே அவர் இருக்கிறார் என்று கூற முடியுமா?" என்று கேட்டார்கள். ஏர் உழுது உடலெல்லாம் சேறு மயமாக நின்று கொண்டிருந்த நானக், இவர்கள் நானக்கின் அடையாளம் தெரியாதவர்கள் போலிருக்கு என்று தெரிந்து கொண்டு 'வாருங்கள், அவரைக் காட்டுகிறேன்' என்று தனது வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று, அமரும்படி கேட்டுக் கொண்டு உள்ளே சென்றார்.

திரும்பி வந்த அந்த ஞான மகானைப் பார்த்த அந்த மக்கள், அப்போதுதான் நம்முடன் வந்தவர்தான் சத்குரு என்பதைப்