பக்கம்:மகான் குரு நானக்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

55


புரிந்து கொண்டார்கள்! அவரை உற்று உற்று நோக்கி ஆச்சரியப்பட்டார்கள். இவ்வாறு அவர் ஏன் இருந்தார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். "உழைப்பிலும் அடக்கத்திலுமே உயர்வு இருக்கிறது" என்பதை அந்த ஞானி அப்போது அவர்களுக்கு உணர்த்தினார். தன்னைத் தேடி வந்த அந்த பக்தர் பெருமக்களுக்கு கடவுளை அடையும் ஞான வழிகளைக் கூறி அவர்களுடன் அளவளாவி, உணவுண்டு, மகிழ்ச்சி பொங்க அவர்களை வழியனுப்பி வைத்தார்.

இரவி ஆற்றின் ஒரு கரையிலே நானக் ஊர் ஒன்றை உருவாக்கினார்! அந்த இடத்திலே இருந்து அடிக்கடி அவர் மறுகரைக்கும் காலாற சென்று வருவார். அந்த மறுகரையிலும் ஒரு திருக்கோவிலை எழுப்பிட அவருக்கு எண்ணம் வந்தது. அங்கே ஒரு கோவிலை கட்டச் செய்தார் நானக், அந்த இடத்திற்கு அவர் தேராபாப நானக் என்று பெயரிட்டார்.

ஒரே ஆற்றின் இரு கரைகளிலும் அவர் ஏன் இரண்டு கோவில்களைக் கட்டினார்? இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான் சத்குரு உருவாக்கிய இரண்டு கோவில்களின் உட்பொருள் விளங்கியது.

வெள்ளையர்கள் இந்தியாவை இரண்டாகப் பிரித்துத்தான்் நமக்கு சுதந்திரம் தந்தார்கள். ஒன்று இந்துஸ்தான்; மற்றொன்று பாகிஸ்தான் அல்லவா? அவ்வாறு பிரிட்டிஷார் பிரித்தபோது கர்தர்பூர் பாகிஸ்தான் அதிகாரத்துக்குள் போய்விட்டது. தேராபாபா நானக் என்ற கோவில் பகுதி இந்தியாவுக்குள் வந்துவிட்டது. ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே, சத்குரு நானக், இந்தியா இப்படி இரண்டு துண்டாக்கப் படும் என்பதை உணர்ந்தாரோ என்னவோ அவரது ஆன்மீக தீர்க்க தரிசனத்தால் ஒரு கோவில் பாகிஸ்தானுக்கும், மறுகோவில் இந்துஸ்தானத்துக்கும் வரும் நிலை ஏற்பட்டு விட்டது என்று சீக்கிய மக்கள் கூறுகின்றனர்.

இந்துவானாலும் சரி, முஸ்லீம் ஆனாலும் சரி, சத்குருவுக்கு அந்த மதபேதமே கிடையாது. அவர் மனித நேயம் கொண்ட மகானாக மட்டுமே இருந்தாரே ஒழிய, எந்த மத மக்களையும் இழிவாக எண்ணியவர் அல்லர் அதே போல சாதி பேதங்களை-