பக்கம்:மகான் குரு நானக்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. எங்கும் இறைவன்

சத்குரு நானக், சில ஆண்டுகள் கழித்து, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது ஞானோபதேசங்களைப் போதிக்கப் புறப்பட்டு விட்டார். அவருடன் மாணவர்கள் மர்தானாவும், பாலாவும் சென்றார்கள்.

நீண்ட நெடுந்தூரப் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இது. சிறு சிறு மலைக் குன்றுகள், பாலைவன மணல் வெளிகள் போன்ற இடங்களை எல்லாம் கடந்து செல்ல வேண்டிய பயணமாகையால், நடந்து போவதின் களைப்பைக் கண்டு சலிக்காமல் இருக்க மர்தானா தனது ரூபாய் இசைக் கருவியால் இன்னிசை பொழிவான். அவனா பொழிகிறான் அந்த நாதத்தை உடன் செல்லும் சத்குரு அருளாசியால், அந்த இசைக் கருவியின் கம்பிகளில் மர்தானா விரல்களை வைத்து அசைப்பான்! அவ்வளவுதான். ரூபாய் இன்னிசைக் கருவி தேவகான மழைகளைப் பொழிந்து, கால்நடைப் பயணத்தின் களைப்பைப் போக்கும்! சலிப்பு ஏற்படாமல் நடந்து கொண்டே செல்வர் மூவரும்!

மர்தானாவிடம் இருந்த ஓர் அதிசய சக்தியைப் போல பாலாவிடமும் ஒரு அபூர்வ சக்தி அமைந்திருந்தது. என்ன சக்தி அது?

ஒரு செய்தியை அல்லது விஷயத்தை தனது செவிகளால் கேட்டு விட்டானேயானால் அதை அப்படியே நினைவில் நிறுத்திக் கொள்ளும் ஓர் அதிசய சக்தி படைத்தவனாக இருந்தான் பாலா. எங்கெங்கே, எவ்வெப்போது, என்னென்ன சம்பவங்களைப் பார்க்கின்றானோ அல்லது கேட்கின்றானோ,அவற்றையெல்லாம் பாலா தனது மனதுள்ளே பசுமரத்தானி போல பதித்துக் கொள்வான். அதற்குப் பிறகு, எத்தனை ஆண்டுகள் கழித்து