பக்கம்:மகான் குரு நானக்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மகான் குருநானக்


இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே அவரால் கைச்சான்றோடு எழுதப்பட்ட தமிழ் மறையாகும் அதனால்தான், இன்று மட்டுமன்று உலகம் உள்ளவரை திருவள்ளுவர் பெருமானுடைய திருக்குறள் அறறிெ இருக்கும் என்பது உண்மையிலும் உண்மையாகும்!

சத்குரு நானக், தம் சீடர்களான மர்தானா, பாலா இருவருடனும் முகமது நபிகள் நாயகம் நகரான மெக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது மெக்காவுக்குச் சில முஸ்லிம் பக்ரிகளும் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானுக்கும் அவர்தம் சீடர்களும் சேர்ந்து துணையாகச் சென்று கொண்டிருந்தனர்.

சத்குருவை நோக்கி ஒரு முஸ்லிம் பக்கிரி, நீங்கள் என்ன மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேட்டார்.

'ஒன்றே தேவன் என்பதை எந்த மதம் ஒப்புகின்றதோ, அந்த மதத்தைச் சேர்ந்தவன் நான்' என்றார் சத்குரு.

முஸ்லிம் பக்கிரிகளுக்கு குருநானக் பதில் வெறுப்பையே அளித்தது. அதனை குரு நானக்கும் நன்கு அறிந்து கொண்டார். இருப்பினும் வழியிலே சேர்ந்த பயண நட்பு. மேலும் மக்கா செல்லும் வரை வழித் துணையும் வேண்டும் அல்லவா? அதனால் அந்தப் பக்கிரிகளுடன் சத்குரு சென்று கொண்டிருந்தார். அப்போது கடும் வெயில் நேரம். இருந்தாலும் வெயிலைப் பொருட்படுத்தாமல் எல்லோரும் மெக்கா நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

சத்குரு நானக்கும், அவரது சீடர்களும், முஸ்லிம் பக்கிரிகளும் சென்று கொண்டிருக்கும்போது, ஓர் அற்புதம் நடந்தது.

முஸ்லிம் பக்கிரிகளும், சத்குரு நானக் அணியினரும் கடும் வெயிலில் மெக்காவை நோக்கி நடந்து கொண்டிருந்த போது, அவர்களது தலைகளுக்கு மேலே கருமேகங்கள் படர்ந்து வந்து குடைபிடிப்பது போல தவழ்ந்தன் அவர்கள் அனைவரும் நடக்க, நடக்க அந்த கருமேகமும் உடன் வந்து கொண்டே இருந்தது. அதனால், அவர்களுக்குக் கடுமையான வெயிலின் கொடுமை ஒன்றும் செய்யவில்லை. என்றாலும் அப்போது யாருக்கும் இந்த