பக்கம்:மகான் குரு நானக்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

61


கருமேகம் குடைபிடிப்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதைப் பெரிதாகயும் அவர்கள் எண்ணவில்லை.

சத்குரு அணியினரும், முஸ்லிம் பக்கிரி அணியினரும் அன்றிரவு ஓரிடத்தில் தங்கினார்கள். வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த பக்கிரிகளுடன் அன்றிரவைக் கழிக்க குருநானக் மகான் விரும்பாததினால், அவர் தமது இரண்டு சீடர்களையும் அழைத்துக் கொண்டு அன்றிரவே, அவர்களுக்குத் தெரியாமல் மெக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

பொழுது புலர்ந்தது. அப்போதுதான் சத்குருவும் அவரது சீடர்களும் சென்று விட்டதை பக்கிரிகள் புரிந்தார்கள். அதனால் இவர்கள் கவலைப்படவில்லை. மதரீதியாக பக்கிரிகள் சத்குருவை விரோதிகளாகத்தான்ே மதித்தார்கள். அதனால் இந்துக்கள் பிரிந்து போனதைப் பற்றி முஸ்லிம்களுக்கு எந்தவித வருத்தமும் ஏற்படவில்லை. பிறகு தங்கள் மெக்கா பயணத்தை அவர்கள் தொடர்ந்தார்கள்.

வெயில் கடும் வெயில் நேரம் ஆக வெப்பம் கொதித்தது. கடுமையான சூடு அவர்களது தலையை தாக்கிற்று. கால்களால் நடக்க முடியவில்லை. பக்கிரிக் குழுவினர் திடீரென வானத்தை அண்ணாந்து நோக்கினார்கள்.

முதல் நாள் சத்குருவுடன் பக்கிரிகளும் சேர்ந்து வந்த போது, நடக்க நடக்கக் குடைபிடித்தது போன்று நகர்ந்து நகர்ந்து வந்த கருமேகத் திரள் இன்று எங்கே போயிற்று? அப்போதுதான் பக்கிரிகள் சத்குரு நானக் ஒரு பெரிய மகான்தான்் என்பதை உணர்ந்தார்கள். மேகம் குடைபிடித்து வந்த அதிசயத்தை அவர்கள் மறுநாள்தான் தெளிவாக அறிந்தார்கள். அடடா நானக்கை முகம் சுளித்து, வெறுப்புமிழ்ந்து வெறுத்ததை நினைத்து அவர்கள் வருந்தி நடந்தார்கள்.

சத்குரு நானக்கும். அவரது இரு மாணவர்களும் பல நாட்களுக்கு முன்பேயே மெக்கா நகரை வந்தடைந்து விட்டார்கள். எப்போதுமே சத்குரு திறந்த வெளியில்தான் படுத்து உறங்குவார். எங்கு போனாலும் அதே பழக்கத்தைத் தான்