பக்கம்:மகான் குரு நானக்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

63


இங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை உமது செயல் நிரூபிக்கின்றதைப் புரிந்து கொண்டீரா? இதுதான் உண்மை என்று சுட்டிக் காட்டினார்.

மெளலானாக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் பெருமக்கள், பக்கிரிகள், மற்ற பொதுமக்களும் சத்குரு மீதிருந்த கோபம் தணிந்து, உண்மையை ஒப்புக் கொண்டார்கள். அரேபிய மக்கள் இடையே இந்த ஆன்மிக சம்பவம் புதியதோர் மறுமலர்ச்சியை உருவாக்கிற்று எனலாம்.

மெக்கா நகரை விட்டு, சத்குரு மதீனா நகர் சென்று மக்களுக்குரிய மார்க்க போதனையைச் செய்தார். பின்பு பாக்தாத் நகர் வந்தார். அந்த நகரிலே அப்போது ஒரு முஸ்லிம் துறவி வாழ்ந்திருந்தார். அவர் பெயர் ஹசரத் குவாஜா பிலால் என்ப தாகும். குரு நானக் அந்த முஸ்லிம் துறவியை நேரிலே சென்று சந்தித்தார். துறவியும் நானக்கைப் பற்றிக் கேள்விப்பட்டதைக் கூறி, இரு இறையன்பர்களும் அளவளாவி மகிழ்ந்தார்கள். குருநானக் அந்த துறவியாருடன் 15 நாட்கள் தங்கி பழகினார்கள்.

பாக்தாத் நகரை விட்டு குரு நானக், தனது மாணவர்களுடன் ஈரான் நாட்டிற்குச் சென்றர். அங்கே புகழ் பெற்றிருந்த சில இஸ்லாம் மத குருமார்களுடன் பேசி மகிழ்ந்தார். மறுபடியும் அங்கே இருந்து தனது இருப்பிடமான கர்தர்பூர் வந்து சேர்ந்தார். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் தாம் கண்ட அனுபவங்களை குருத்துவாரம் பக்தர்களுக்கு விளக்கிக் கூறி மகிழ்ந்திருந்தார்.